ஜனவரி 8, 2011 அன்று மிசெளரி தமிழ்ப்பள்ளியின் 2010-11 கல்வி ஆண்டுக்கான தமிழ்த்தேனீப் போட்டிகள் செயின்ட் லூயிஸ் நகரில் டேனியல் பூன் நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரும் மற்றும் பிற மாணவர்களும் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகள் 4 நிலைகளைக் கொண்டவையாக இருந்தன. ஒவ்வொரு நிலையும் எழுத்துத் தேர்வு, வாக்கியம் அமைத்தல், கதை சொல்லுதல், மொழி பெயர்ப்பு, திருக்குறள், பேச்சுப்போட்டி போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது.
6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 22 பேர் கலந்து கொண்டனர். நடுநிலைப் பள்ளிப் பிரிவில் ஒன்றான பேச்சுப் போட்டியில் ஆங்கிலம் கலக்காத அழகிய தமிழில் பல்வேறு தலைப்புக்களில் மாணவ, மாணவியர் அற்புதமாகப் பேசியனர். போட்டிகளில் பங்கேற்ற, வெற்றிபெற்ற அனைவருக்கும் ஜனவரி 15 அன்று தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசு பெற்றவர்கள்: அமுதயாழினி பொற்செழியன், பௌர்ணிகா முனியாண்டி, பரத் பழனிச்சாமி, மதுமிதா பிரபாகரன், பூஜா சோலையப்பன், நம்பி பொற்செழியன், துவாரக் வி. நாயம், சத்யா சிவசங்கர், காவ்யா அழகேந்திரன், திவ்யா ஸ்ரீஹரி, பூர்வா வி. நாயம், விஷால் கந்தசாமி, மிர்ரா இராமகிருஷ்ணன், ஜஸ்வந்த் பிரபாகரன், விஷ்ணு கனிக்கண்ணன், ப்ரித்வி தனபால், ராஷ்மிதா நந்தகுமார், வர்ஷினி அசோக், அபராஜிதா திருமக்குலம், மானவ் ராஜா வினோதா, மானஸா கணேஷ், ஸ்னேகா ஸ்ரீநிவாசன் மற்றும் ஹரிணி கணபதி.
பங்கேற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்: லட்சுமி கனிக்கண்ணன், ராகுல் சோலையப்பன், அனன்யா செந்தில்நாதன், ஆதித்யா திருமக்குலம், சுப்ரியா ரத்தினம், ஸ்வேதா விமலாதித்தன், ஆதிசரண் ஸ்ரீதர், விகுந்த் நந்தகுமார், சந்தோஷ் ஜோதிலிங்கம், பரத் சடகோபன், ஓவியா ஸ்ரீஹரி, சஞ்சனா ஆனந்த், வருண் பழனிச்சாமி, ரத்திக்கா முருகன், திவ்யா முனியாண்டி, ஷிவானி ஐயனார் மற்றும் கனிஷ்க் சண்முகம்.
மிசௌரி தமிழ்ப்பள்ளியை பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைத்துவரும் முனைவர். மதியழகன் பரிசுகளை வழங்கினார். அவரது சேவைக்கு நன்றி தெரிவித்து மாணவச் செல்வங்கள் கையொப்பமிட்ட பாராட்டுக் கவிதை ஒன்று அரங்கில் வழங்கப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு: school@missouritamilsangam.org
செய்திக் குறிப்பிலிருந்து |