சான் டியேகோவில் வைகாசித் திருவிழா
சான் டியேகோவில் உள்ள ஸ்ரீமந்திரில் ஜூன் 13 ஞாயிறன்று வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை 8.30க்குப் பால் குட ஊர்வலத்துடன் விழா துவங்கியது. சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் அரோகரா என்று கோஷமிட்டபடி கோவிலை வலம் வந்தனர். அடுத்து பால், தயிர், தேன், பஞ்சாமிருதம், விபூதி என நடந்த அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சி. திருவிழாவின் முக்கிய அம்சமாகத் திருக்கல்யாணம் நடந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை இழுத்து வந்தனர். பின் முருகனை ஊஞ்சலில் அமரவைத்துத் தாலாட்டுப் பாடினர். செல்வி சிந்துஜா, ஆறுமுகனுக்காக அருமையான ஆறு பாடல்களைப் பாடி சங்கீத சேவை செய்தார். இறுதியில் மஹா தீபாராதனை நடந்தது.

மேல் விவரங்களுக்கு: sdmurugardevotees@gmail.com

படம்: சுந்தர் கார்த்திகேயன்

© TamilOnline.com