‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்று பாரதியைப் போலச் சொல்பவர்கள் நிறையப் பேர். ஆனால் அதையும் விளையாட்டாக, ரசிக்கும்படி சொல்லிக் கொடுக்கும் கல்விக் கழகம் அலோஹா. கணக்கின்மீதிருக்கும் அச்சத்தைப் போக்குவதோடு, கணிதப் புதிர்களை மனதிலேயே விடுவிக்கவும் பயிற்சி கொடுத்து அதில் போட்டிகளை ‘ALOHA கணித ஒலிம்பியட்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது.
அமெரிக்கா முழுவதிலும் 33 மையங்களில் 1000 சிறாருக்குமேல் முதல் சுற்றில் கலந்துகொண்டனர். ஜூன் 4 அன்று அதன் நாலாவது வருடாந்திரப் போட்டியின் இறுதிச்சுற்று நியூ ஜெர்சியில் நடந்தபோது 3000 பேர் பார்த்துக் கொண்டிருக்க மேடையில் சிறார்கள் 5 நொடிகளில் சிக்கலான கணக்குகளையும் விடுவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அதிதி அதடா (9 வயது), பிருத்வி ஐயர் (8 வயது), ப்ரூதா படேல் (8 வயது), சுமயா வாவ்டா (14 வயது) ஆகியோர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
2006ல் மணி மாணிக்கவேலு அலோஹாவை அமெரிக்காவில் தொடங்கினார். தற்போது இதற்கு நாடு முழுவது 80 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். “எனது சின்ன வயதில் இப்படி ஒரு வாய்ப்பு இருந்திருந்தால் நான் கணிதப் பாடத்தைக் கண்டு பயப்பட்டிருக்க மாட்டேன்” என்கிறார் ஒரு தாயார்.
மேலும் விவரங்களுக்கு: www.aloha-usa.com
செய்திக் குறிப்பிலிருந்து |