ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சுப்பிரமணியபுரம்', ‘பசங்க' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கும் புதியபடம் ‘யாதுமாகி'. கதையம்சம் உள்ள படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்பதில் உறுதியாக இருக்கும் வசந்தன், இப்படத்திற்காக டிராஷ் இசையில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். யாருக்கும் உபயோகப்படாது என்று தூக்கியெறிந்த பிளாஸ்டிக், தகரம், பாட்டில் போன்ற குப்பைகளைப் பயன்படுத்தி இசைப்பதற்குப் பெயர்தான் டிராஷ் இசை என்பதாகும். தமிழ்நாட்டுக்கு இவ்வகை இசையில் ஜேம்ஸ் வசந்தனே முன்னோடியாகிறார். யுவன் என்ற புதுமுகம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி சுனேனா. சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் இப்படத்தைத் தயாரிக்கிறார். இயக்கம் ஆர். பாலகுமார்.

அரவிந்த்

© TamilOnline.com