பா பொங்கல்
பொங்கலுக்கு உங்களுக்கு வெறும் வாழ்த்துச் சொல்வதோடு நிற்காமல் வாட்டும் சொல்லையும் தருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பழைய சரக்கு இந்தப் பா.
சென்னையில் போகியின்போது எளிய சிறுவர்கள் கரும்பைத் தின்று கொண்டு தாளக்கருவியைக் கொட்டிப் பழந் துணிகளையெல்லாம் எரித்ததைப் பார்த்தபோது எழுதியது. ஆனால் சுற்றுப்புறச் சூழல் கெடக்கூடாதென்று மாசுக் கட்டுப்பாட்டுக்காக அரசின் அறிவுறுத்தலால் கடந்த ஐந்தாறு வருடங்களாக இவ்வழக்கம் குறைந்துவிட்டது என்று கூறவேண்டும். முன்னுரை போதும், இதோ:
கரும்புகை யேந்தி கடித்ததன்சா றுண்டு
கரும்புள்ளைக் கூவிக் கவளங்கள் தந்து
கரும்புகை தோன்றிடக் கந்தலைத்தீக் கிட்டோர்க்
கரும்பும் உளத்தில் களிப்பு
இப்பாடலில் வரும் நான்கு கரும்புகளும் என்னவென்று அறிந்துகொள்வது புதிரை ரசிப்பவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்று நம்புகிறேன்.
குறுக்காக:
3. எண்ணி முறுக்க எதிரேவா (3)
5. மராட்டிய சனம் சமய விலக்கால் சுற்றி விளையாடுவது (5)
6. இரண்டெழுத்துக் கையெழுத்து போதும் காவலரிடம் அகப்படுவதற்கு (2)
7. ஆற்றை அழைக்க அருள்மொழியிடம் அவள் வருவாளா? (3)
8. சிங்களப் பணியாரத்தைப் பிடிக்க பல இடங்களுக்குச் சென்று செய்த வேலை (5)
11. கலப்பையா? வேண்டாம், ஏராளமான முள் தைத்து வதைத்தாலும் கௌரவத்துடன் இருக்கும் (5)
12. பெருந்தேரோடும் ஊரில் ஒரு கனியை ஒளித்துப் பொழிவது தேவர் வேலை (3)
14. அஞ்சனம் ஒரு தானியத்தில் இல்லாவிட்டால் என்ன, புளியில் இருக்குமே! (2)
16. சுத்தமாகத் தேய்த்த பாத்திரம் போன்ற துறவிகளின் மனப்பக்குவம் (5)
17. வாய்க்கு வந்த படிச் சொல்லி வாயில் சிறியதுதான் (3)
நெடுக்காக:
1. பழைய செருப்பு கடைசியாக ராமா! தனன ததிங்கினத்தோம் (6)
2. ஊதுவதைக் கைப்பிடித்து முன்னுரை (3)
3. அரேபியாவில் பறப்பது வீட்டில் தரையோடு கிடக்கும் (5)
4. நாடகத்திற்கான பயிற்சி பாதி கண்டு ஆச்சரியமடை (2)
9. வேறொரு புரவியை வாங்குவதும் கொடுப்பதும்? (6)
10. விமானத்திற்குச் செல்ல உதவி செய்யும் விலைக் குறைப்பு? (5)
13. மெய்யின்றி இறங்கும் பறவைகளிலிருந்து உதிர்வது (3)
15. திருவனந்தபுரத்து அந்தாதி பாடி வழிபடு? (2)
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
vanchinathan@gmail.com
டிசம்பர் 2008 - புதிர் மன்னர்கள்
1. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
2. ஏ.வி.லக்ஷ்மிநாராயணன், சான்டியாகோ, கலி.
3. வி.ஆர்.பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்சி
குமார் ராம சுப்ரமணியம், நியூ ஜெர்சி
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
டிசம்பர் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக:5. சாதி, 6. விண்ணம், 7. உதிருமா, 8. அம்மை, 9. கல்வி, 11. சீவாளி, 13. சிக்கல், 16. மத்யமாவதி, 17. கணை
நெடுக்காக: 1. நீதிமதி, 2. காவியமாக, 3. கோணம், 4. ரூபகம், 10. விசித்திர, 12. வார்த்தை, 14. கடகம், 15. சாமான்