குறுக்காக
3. சச்சரவில்லாத அழுக்கு சேர்த்து முனக வேறுபடு (5)
6. சுவாரசியமான மேரு சிகரத்தில் கண்டது (4)
7. எமன் உள்ளே வரத் தொடங்கியதால் பாதுகாப்பளிப்பவன் (4)
8. தகரங்களின் அடுக்கு தேன் போலிருந்தது (6)
13. வெண்மையைத் தருவது தமிழகப் பைன் மர மாலை (6)
14. கறி வாழை (4)
15. உள்ளமுவந்து மாற்றிய மரத்தாலான துண்டுகள் இரண்டில்லை (4)
16. கல்லானாலும் கணவன் என்றெண்ணுபவள் சித்திரை இறுதியில் கலைத்த மார்கழிப்படலம் (5)
நெடுக்காக
1. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் (5)
2. ஒருவனுக்குச் சாப்பாடில்லையென்றால் ...................... அழித்திடுவோம் என்றார் முண்டாசுக்காரர் (5)
4. குறையற்ற செவி நீருள்ளே அமிழ்வதில்லை (4)
5. வெறும் நூறு குழி பரப்பளவுள்ள வயல்தான் பெரிய நாடாம்! (4)
9. கட்டி ஒட்டியெழுது (3)
10. புத்தரின் சிலை வணங்கச் சொல்லும் உள்ளத்தில் ஒளிந்திருப்பது காயா? (5)
11. முழுமையான பாட்டின் பகுதி பூச்சூடிக் கலைத்தது (5)
12. திருநாளைப்போவாருக்குத் தடை போட்டு கன்னி இறுதியாகப் பெரிய பழுவேட்டரையரை மணந்தாள் (4)
13. எங்குமிருப்பவன் சிலையாய் இருக்குமிடம் (4)
தமிழில் குறுக்கெழுத்துப் புதிர்கள் ஆங்கிலத்தின் பாணியைப் பின்பற்றுவது போல் தோன்றலாம். அது ஓரளவு உண்மையென்றாலும், சொற்களை விதம்விதமாக உடைத்தும் இடம் மாற்றியும் பொருள் கொண்டு விளையாடுவது காள மேகத்தின் சிலேடைகளிலிருந்து இப்போது திரைப்படப் பாடல்கள் வரை காணலாம். ‘கோவைக்காய், அவரைக்காய்’ என்று சொல்லி இங்கே வந்து காயாதே என்று நிலவைக் கேட்டுக் கொள்வதாக அமைந்த “அத்திக்காய்” என்ற பாடலின் அழகும் அக்கருத்தைப் பலவிதங்களில் மீண்டுமீண்டும் கூறிய பாடலாசிரியரின் திறமையும் எத்தனையோ பேரை வசீகரித்திருக்கிறது. அதன்பின்னர் வந்த முயற்சிகள் (“ராதா காதல் வராதா”, “வான் நிலா அல்ல” என்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள்) அத்தனை அழகாக அமையவில்லை. பின்னர் ஆவாரம்பூ, கொத்தமல்லிப்பூ என்று கிராமிய மணங்கமழ வந்த பாடல்கள் நடுவே ஓரளவு சுவாரசியமானதொன்று: “சிறு பொன்மணி அசையும்” என்று தொடங்கும் பாடலில் “நதியும், முழுமதியும் என் இதயம்தனில் பதியும். ரதியும், அவள் பதியும் போல் நம் காதல் உதயம்” என்ற அடிகள் பொருளில் பெரிதாக இல்லையென்றாலும் நல்ல ஓசைநயத்தால் பாடலின் இனிமைக்கு மெருகேற்றின.
இதுபோல் திரைப்படப் பாடல்கள் நல்லதாக உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மார்ச் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: என்ற சுட்டியில் காணலாம்.
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது Puthir Help என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
பிப்ரவரி 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 1. மதுவந்தி 4. தாசி 6. விலகாத 7. அம்பானி 9. புதிரானது 12. பரிசல் 14. சபாபதி 17. கதை 18. குளம்பொலி
நெடுக்காக: 1. மனைவி 2. வளைகாப்பு 3. தினை 4. தானம் 5. தானியம் 7. அன்ன 8. கம்பளி 10. திடல் 11. துலாபாரம் 13. சந்தை 15. தில்லி 16. பாகு
பிப்ரவரி 2008 புதிர் அரசிகள்
1. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
2. முரளி ஸ்வாமிநாதன், பங்களூரு
3. சிங்காநல்லூர் கணேசன், ப்ரீமாண்ட், கலி.
சரியான விடை அனுப்பிய மற்றவர்கள்:
ஷீலா கோபால ஸ்வாமி, அட்லாண்டா, ஜார். லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார். குன்னத்தூர் சந்தானம், சென்னை நடாதூர் சுந்தர், கூபர்டினோ, கலி. குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்ஸி இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
புதிர் விடைகள் அடுத்த மாத (ஏப்ரல் 2008) இதழில் வெளிவரும்.