புதிய சட்டங்களை வரையறுக்கும்போது .... பெண்களை மறந்து விடாதீர்கள்... உங்களுடைய மூதாதையரைப் போல் அல்லாமல், அவர்களிடத்து கருணை காட்டுங்கள். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்றுங்கள் கணவன்மார்களுக்கு வரம்பு கடந்த அதிகாரத்தைக் கொடுத்து விடாதீர்கள். வாய்ப்புக் கிடைத்தால், ஒவ்வொரு கணவனும் கொடுங்கோலனாகக் கூடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் நீங்கள் தனிச் சிறப்பான அக்கறையும் கவனமும் காட்டாவிட்டால் நாங்கள் கிளர்ச்சி செய்வோம். எங்களுடைய தேவைகளை உள்ளடக்காத சட்டங்களுக்கு, எங்களுடைய கருத்துகளுக்கு இடமளிக்காமல் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம்."
(அமெரிக்காவின் இரண்டாவது குடியரசு தலைவராக அமர்த்தப்பட்ட ஜான் ஆடம்ஸ் என்பாரின் மனைவி அபிகெய்ல் ஆடம்ஸ் தனது கணவருக்கு எழுதிய கடிதமொன்றில்) |