முதல்வர் வீட்டில் இருந்து திரையுலகிற்கு ஒருவர் காலடி எடுத்து வைக்கிறார். ஆம் தமிழக முதல்வர் பேரனும், உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சமீபகத்தில் ரெட் ஜியன்ட் மூவிஸ் என்ற பெயரில் புதிய படநிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கிறார். தங்கள் படநிறுவனத்தின் மூலம் இரண்டு புதிய தமிழ்த்திரைப்படங்களை தயாரித்து அளிக்கவிருக்கிறார் உதயநிதி. இன்று தமிழ்திரைப்பட உலகின் முன்னணி கதநாயகர்களாக விளங்கும் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கவிருக்கும் இப்படங்களை தரணி மற்றும் செல்வராகவன் இயக்கவிருக்கிறார்கள்.
"படங்கள் தயாரிப்பது எளிதான வேலை இல்லை. நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் நல்ல தொழில் தான்.." என்று கூறும் உதயநிதி சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |