குறுக்காக
1. சாலைகள் சேருமிடம் பாதை தவறிய சந்தை பாதிப்பு (5) 4. இந்த விநாயகர் அப்பாவுக்கு இரண்டாம் தாரமோ? (3) 6. கோகுல வைணவரிடையே கிராமத்துப் பெண்கள் பாட்டு (3) 7. இசைவைத் தெரிவிக்க அதுவின்றி அலையாது வெளியே தட்டு (5) 8. படையின் ஆக்கிரமிப்புக்கு, கைக்கு முன் முதிர்ச்சியடை (4) 9. கடை அச்சு கடைவதைக் கொண்டு பாரத்தையேற்று (4) 12. இராணுவத்தினருக்குத் தேவையான குணத்திற்கு காலில்கால் உள்ளே திரும்புவது வேரா? (5) 14. எதிர்க்கும் பிரசுரம் கொண்ட குறையாத பாத்திரம் (3) 16. சுடத் தொடங்கி ஆறிய காயம் சென்ற அடையாளம்! (3) 17. இப்படிக் கும்பிட அறுவைச் சிகிச்சை நிபுணர் தேவையோ? (5)
நெடுக்காக
1. காயிலை (வினைத்தொகை) (3) 2. சரிகமபதநி தியாகராய நகர் (5) 3. இந்தியாவின் தலைப்பு மாற ஊட்டச்சத்து (4) 4. இராக் அருகே அழுமூஞ்சி நாடு? (3) 5. கள்ளத்தொழில் மாற்றமடைய துதி, வருடு (5) 8. வேலையில் தீவிரம், நேரடியாக மட்டையில் விழும்படி பந்து போடுவதற்கா? (2,3) 10. மாளிகை மடு உள்ளே மாற்றி எறிதல் (3,2) 11. அய்யராத்துப் பையன் கரம் பிடிக்கப் பார்வதி (4) 13. சத்தத்திற்கும், சதித்திட்டத்திற்கும் வைப்பது (3) 15. ஆரமில்லாமல் தொடங்கி... பைத்தியம் தான் (3)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
விடைகள் குறுக்காக: 1. சந்திப்பு 4. சித்தி 6. குலவை 7. தலையாட்டு 8. முற்றுகை 9. சுமத்து 12. வீராவேசம்(வீசம்+வேரா) 14. சுரபி 16. சுவடு 17. கையெடுத்து
நெடுக்காக: 1. சருகு (காய்ந்த, காய்கின்ற, காயும் இலை) 2. திருவையாறு (சங்கீத மும்மூர்த்தியிலொருவரான தியாகையரின் ஊர்) 3. புரதம் (பாரதம்-பா+பு) 4. சிரியா 5. திருடுவது 8. முழு வீச்சு 10. மச்சு வீடு 11. அம்பிகை 13. வேட்டு 15. பித்து |