ஜுலை 2004 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. சங்க இலக்கிய வகை பிராமண வீட்டிற்குச் சமம் (5)
6. ஒன்று சேர்ந்து இரண்டு பாதி தலைகளின்றிக் குழம்பும் (4)
7. பேச இயலாத வாசலா தவழ ஆரம்பிப்பது? (4)
8. கல்லைச் சுமந்து பந்தலில் ஆடிச் சமையலுக்கு வருபவர் (6)
13. உள்ளே ரசி பைத்தியம் பெயர்போனது (6)
14. சொந்தமாகச் சம்பாதித்த சில்லறை பையில் இருக்காதோ? (4)
15. இருமடங்கு செழிப்பான பேச்சு நீண்டுகொண்டே போகும் (4)
16. மழைக்காலத்தில் தலை காட்டும் காவலாளிக்கு ஆடை (5)

நெடுக்காக

1. சுல்தான் ஒளிந்துள்ள இடையில்லா மதுரை நூல் பற்றிய விமர்சனம் (5)
2. வெள்ளைக்கப்பல் மூன்றாமிடத்திற்குரிய பதக்கம் (5)
4. புருஷா, நாய் வாலை ஒட்ட மலைவழி (4)
5. பாடல்களில்லாது நாட்டியத்தில் ஓர் அங்கம் (4)
9. கழுகாலா ரத்தம்? உள்ளே அலுப்பு போக நடக்கலாம் (3)
10. மண்வெட்டியால் வேலை செய்ய பாதி பள்ளம் கோட்டையோடு சேரும் (5)
11. அரைப் பவளம் பரிசம் சுரமில்லா ஊதியம் (5)
12. முதலில் பிழிந்து காய்ந்த இஞ்சி எண்ணெய் தந்த கறை (4)
13. மயங்கச் சொல்லும் சட்டை (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

விடைகள்

குறுக்காக: 3. அகத்திணை 6. திரண்டு 7. வாயிலாத 8. புடலங்காய் 13. பிரசித்தம் 14. கைக்காசு 15. வளவள 16. நாய்க்குடை
நெடுக்காக: 1. மதிப்புரை 2. வெண்கலம் 4. கணவாய் 5. தில்லானா 9. காலார 10. கொத்தளம் 11. சம்பளம் 12. சொக்காய் 13.பிசுக்கு

© TamilOnline.com